சென்னை போரூர் மதனந்தபுரம் காமாட்சி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று (டிச.29) முன்தினம் மதுரையில் உள்ள உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
இந்நிலையில், நேற்று (டிச.30) காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் பின் நின்ற காரும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து மாங்காடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, மாங்காடு காவல்துறையினர் புகாரின் பேரில் சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகள், வீட்டிற்கு பின்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஆகியவற்றை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
காவல்துறையிடம் சிக்காமல் இருக்க வீட்டில் இருந்த சோபாவை கிழித்து அதிலிருந்து பஞ்சை எடுத்து தண்ணீரால் நனைத்து கைரேகைகள் எல்லாம் துடைத்து விட்டு சென்றனர். கொள்ளையர்களின் கைரேகை இல்லாததால் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
கொள்ளை நடந்தது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிரான போரை தொடர வேண்டும் - உலக சுகாதார அமைப்பு