உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கடமை தவறியதாக 17 காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் அடக்கம். அவர் பெயர் நீரஜ் குமார்.
இவர் தவிர மீதமுள்ள 16 பேரும் சாதாரண காவலர்கள் ஆவார்கள். இவர்கள் மீது விடுமுறை முடிந்தும் பணிக்கு திரும்பாமல் இருந்தல், ஹோலி பண்டிகையின் போது கடமை தவறியது உள்ளிட்ட குற்றஞ்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிஜ்னோர் மாவட்டத்தில் 46 கிராமங்கள் காவலர்களின் சிறப்பு கவனத்தின் கீழ் உள்ளது. 3650 பேருக்கு பிரச்னைக்குரியவர்கள் என்று எச்சரிக்கை நோட்டீஸ்களும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.