வாஷிங்டன்: அமெரிக்கவின் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டனர். அவர்களுடன் 200-க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் தீபாவளியை கொண்டாடினர்.
அப்போது கமலா ஹாரிஸ் கூறுகையில், சிறுவயதில் தீபாவளி கொண்டாடியதில் எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன. தீபாவளியை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்குச் செல்வோம். நானும் என் சகோதரி மாயாவும் தெருவில் மத்தாப்புகளை கொழுத்துவோம். எனது தாத்தா பாட்டி இனிப்புகளை கொடுப்பார்கள்.
எனது தாயார் 19 வயதில் தனது படிப்பிற்காக அமெரிக்கா வந்தார். இந்த நாட்டில், எங்களுக்கான ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். என்னையும் எனது சகோதரியையும் வளர்த்தார். ஒரு தாயகவும், குடிமகளாகவும் அவரது அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, தைரியம் காரணமாகவே இன்று நான் அமெரிக்காவின் துணை அதிபராக உங்கள் முன் நிற்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்தாண்டு முதல் நியூயார்க் பள்ளிகளில் தீபாவளி விடுமுறை