வாஷிங்டன்: இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. தற்போது ஹமாஸ் ஆயுதக் குழுவின் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்று இஸ்ரேலுடன் துணை நிற்பேன் என கூறியுள்ளார். மேலும், இஸ்ரேலின் ரானுவத்தை உலகின் மிகவும் மேம்பட்ட ராணுவமாக மாற்ற மில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்க செலவிட்டு வருகிறது.
இந்நிலையில், ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு 14 பில்லியன் டாலர் உதவி வழங்குவதற்கான குடியரசுக் கட்சியின் ஆதரவு மசோதா நேற்று சபையில் நிறைவேற்றப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த அக்.7ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 9000 ஆயிரத்தை கடந்துள்ளது என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவின் மேல் நடந்த வான்வழித் தாக்குதலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 256 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். மொத்தமாக 9,061 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 3760 குழந்தைகள் மற்றும் 2321 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்க் அதிபர் ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியதில் ஹமாஸ் இஸ்ரேல் இடையே போர் இடைநிறுத்தம் தேவை. பிணைக் கைதிகளை மீட்பதற்காக கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் பைடனின் பேச்சு வைரலாக தொடங்கியது.
இதற்கு வெள்ளை மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், வெளிநாட்டினர் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் வகையிலும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் விளக்கியுள்ளதாக தெரிவித்தது.
இதையும் படிங்க: இந்தோனேசியாவில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை?