ETV Bharat / international

டொனால்டு டிரம்ப் மீதான வழக்கு: ஆபாச பட நடிகைக்கு அபராதம் - என்ன நடக்கிறது? - Stormy Daniels

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கா டாலரை அபராதமாக விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Trump
Trump
author img

By

Published : Apr 5, 2023, 2:31 PM IST

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு கலிபோர்னியா நீதிமன்றம் அபராதம் விதித்தது. ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கி அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் திக்குமுக்காடி வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிரம்ப் தரப்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, அபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் வணிகை பதிவில் முறைகேடு செய்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான விசாரணை நடைபெற்ற அதேநேரத்தில், கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஸ்டார்மி டேனியல்ஸ் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

கலிபோர்னியா நீதிமன்றம் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. டொனால்ட் டிரம்புக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு இதேபோல் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஸ்டார்மி டேனியல்ஸ் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த வழக்கில் ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் அதற்கு 2 லட்சத்து 45 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஸ்டார்மி டேனியல்ஸ், டொனல்டு டிரம்புக்கு பெரு தலைவலியாக இருந்தார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்த நிலையில், அவர் தன்னுடன் சில நாட்கள் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஸ்டார்மி டேனியால்ஸ் கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக ஸ்டார்மி டேனியல்ஸ் மேற்கொண்டு பேசாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் அவருக்கு வழங்கபட்டதாக கூறப்பட்டது. ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு வழங்கப்பட்ட பணம், தேர்தல் நிதியில் இருந்து வழங்கப்பட்டதாகவும், அதை தேர்தல் செலவு என பொய்யாக கணக்கிடப்பட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றம் விசாரித்தது. முன்னாள் அதிபர் டிரம்ப் தன் தேர்தல் செலவில் திருத்தங்கள் செய்து வணிக பதிவை மாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக டொனால்ட் டிரம்ப் நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவர் மீது வணிக பதிவு திருத்தம் உள்ளிட்ட 34 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். மேலும் சட்டவிரோதாமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க : அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா பதில் - இந்தியாவுக்கு ஆதரவா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.