ETV Bharat / international

ஐநா சபையில் இந்தி உள்ளிட்ட 6 மொழிகள் சேர்ப்பு

author img

By

Published : Jun 11, 2022, 2:48 PM IST

ஐநா சபையில் இந்தி உள்ளிட்ட 6 மொழிகளை அதிகாரப்பூர்வமற்ற மொழிகளாக சேர்க்கும் பன்மொழித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

UNGA
UNGA

அமெரிக்கா: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த ஆறு மொழிகளிலேயே ஐநா சபையில் தீர்மானங்கள் உள்பட அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், ஐநா சபையின் செயல்பாடுகளை சர்வதேச அளவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில், பன்மொழி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை ஐரோப்பிய நாடான அன்டோரா முன்மொழிய இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் வழிமொழிந்தன.

இதன்படி ஐநாவில் அதிகாரப்பூர்வமற்ற 6 மொழிகள் சேர்க்கப்பட்டன. இதில் போர்ச்சுகீசியம், பாரசீகம், இந்தி, வங்காளம், உருது உள்ளிட்ட ஆறு மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஐநா சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள், முக்கிய தகவல்கள் அனைத்தும், ஐநாவின் அதிகாரப்பூர்வ மொழிகளோடு, இந்தி உள்ளிட்ட அதிகாரப்பூர்வமற்ற மொழிகளிலும் வெளியிடப்படும்.

இதேபோல் மேலும் பல மொழிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை ஐநாவுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி வரவேற்றுள்ளார். அப்போது பேசிய அவர், "இந்தாண்டு முதன்முறையாக பன்மொழி தீர்மானத்தில் இந்தி, வங்காளம், உருது மொழிகள் சேர்க்கப்பப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

பன்மொழி தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்த ஐநா பொதுச்செயலாளருக்கு நன்றி. இந்த தீர்மானம் மூலம் ஐநாவின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் எளிமையாக உலகின் பல பகுதிகளை சென்றடையும்" என்று தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு முதல், ஐநாவின் இணையதளம் மற்றும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் ஐநா தொடர்பான செய்திகள் இந்தியில் பகிரப்படுகின்றன. ஐநா சபையில் இந்தி பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு இந்தியா எட்டு லட்சம் அமெரிக்க டாலர்களை கடந்த மாதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:யார் இந்த அப்து ரோஸிக்? - முழுவிவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.