ETV Bharat / international

Toxic gas leak: தென் ஆப்பிரிக்காவில் விஷவாயுக் கசிவு - 3 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழப்பு!

தென் ஆப்பிரிக்காவில் போக்ஸ்பர்க் நகரில் நைட்ரேட் வாயு கசிந்ததில், மூன்று குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். சுரங்கத் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியில் வைத்திருந்த நைட்ரேட் வாயு சிலிண்டர் கசிந்ததால் இந்தச் சோக சம்பவம் நடந்துள்ளது.

Toxic gas
தென் ஆப்பிரிக்கா
author img

By

Published : Jul 6, 2023, 11:56 AM IST

தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மாகாணத்தில் போக்ஸ்பர்க்கின் புறநகரில் குடியிருப்புப் பகுதி உள்ளது. அங்கு சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தற்காலிமாக குடிசைகளைக் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த குடியிருப்புப் பகுதியில் நேற்று(ஜூலை 5) இரவு திடீரென விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. விஷவாயு அப்பகுதி முழுவதும் பரவியதில், அதனை சுவாசித்த தொழிலாளர்கள் பலரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதேபோல், விஷ வாயுவை சுவாசித்து பாதிக்கப்பட்டிருந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷவாயுக் கசிவால் 24 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

தங்க சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரேட் வாயு சிலிண்டர்கள் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு சிலிண்டரில் இருந்து வாயு கசிந்ததன் காரணமாகவே இந்த கோரச்சம்பவம் நடந்ததாகவும் தெரிகிறது. இந்த நைட்ரேட் வாயு, தங்கச் சுரங்கங்களில் பாறை மற்றும் மண்ணிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால், பழைய, மூடப்பட்ட சுரங்கங்களிலும் சட்டவிரோதமாக பலர் தங்கத்தைத் தேடுகின்றனர். ஜோகன்னஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக பல தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற சட்டவிரோத சுரங்கப் பணிகளில், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தென்ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரிகிறது.

முன்னதாக கடந்த மே மாதம் தென்ஆப்பிரிக்காவில் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் வெல்கோம் நகரில் பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. அந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்தது. இதில், 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்த சுரங்கத்தில் தென் ஆப்பிரிக்காவின் அண்டை நாடான லெசோதோவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியா செல்லும் ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியது - 7 பேர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.