உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக பல்வேறு நாடுகளுக்கும் இணைய சேவையை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பல்வேறு தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகளுடன் இருக்கும் நாடுகளில் ஒன்றான ஈரானில், தனது ஸ்டார்லிங்க் இணைய வசதியை ஏற்படுத்த எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஸ்டார்லிங்க் நிறுவனம் ஈரானில் செயல்படுவதற்கான அனுமதியை கோரி ட்வீட் செய்துள்ளார்.
இதனை ஒருங்கிணைந்த நாடுகளின் (US) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “ஸ்டார்லிங்கின் இந்த கோரிக்கை குறித்து கருவூலத்தின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஈரானிய மக்கள் பல்வேறு நாடுகளுடன் இருப்பவர்களை தொடர்பு கொள்வதற்கு பல விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தற்போது ஸ்டார்லிங்க் தனது இணைய சேவைக்கு அனுமதி கேட்டிருப்பது, ஈரானிய அரசின் ஆட்சேபனைக்கு வரலாம்.
அதேநேரம் கடந்த 2014 ஆம் ஆண்டு கருவூலத்தின் தடைகள் பிரிவு, குறிப்பிட்ட மென்பொருள் ஏற்றுமதிக்கான உரிமத்தை வழங்கியது. மேலும் 2021 ஆம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் Github நிறுவனம், மூலக்குறியீடு மூலம் தனது பாதுகாப்பான சேவையை ஈரானிய டெவலப்பர்களுக்கு வழங்கி வருகிறது” என தெரிவித்தார்.
சமீபத்தில் அண்டார்டிகாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை எலான் மஸ்க் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குருவிக்கே கூண்டா... ட்விட்டர் முன்னாள் பாதுகாப்புத்துறை தலைவர் புகார்... மகிழ்ச்சியில் மஸ்க்