தென்னாப்பிரிக்கா: ஜோகன்னஸ்பர்க் நகரில் சோவெட்டோ டவுன்ஷிப்பில் உள்ள பார் ஒன்றிற்கு, நேற்றிரவு(ஜூலை 9) சிறிய பேருந்தில் சிலர் சென்றனர். திடீரென பாரில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டு விட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.