ETV Bharat / international

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு ; மேயர் உள்ளிட்ட 18 பேர் உயிரிழப்பு - மெக்சிகோ படுகொலை

மெக்சிகோவில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேயர் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு ; மேயர் உட்பட 18 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Oct 6, 2022, 11:25 AM IST

மெக்சிகோ: குரேரோ மாநில சிட்டி ஹாலில் நேற்று(அக்.5) அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நிகழ்த்த தொடங்கினர். இந்த தாக்குதலில் அங்கிருந்த மிகுல் தோதொலபன் நகர மேயர் மெண்டோசா அல்மேடா உட்பட பலர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து குரேரோ மாநில கவர்னர் எவெலின் சல்கடோ பின்னேடா, “மேயர் மற்றும் அரசு அலுவலர்கள் மீது நடத்தப்பட்ட வன்மத் தாக்குதல்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் உறுதியாக உள்ளோம், சான் மிகுல் தொதொலபன் நகரத்து மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிஎன்என் ஊடகம் தனக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்கிறது - கடுப்பில் வழக்குத்தொடர்ந்த டிரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.