இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் ராஜினாமா செய்த இரண்டே நாளில் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் வாபஸ் வாங்கின. இதையடுத்து அவரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் இம்ரான் கானின் அரசு இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, இம்ரான் கான் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார்.
இதையும் படிங்க : ஆட்சி கவிழ்ந்தது... அரசு இல்லத்தை காலி செய்த இம்ரான் கான்...