ETV Bharat / international

உழைப்பே உயர்த்தும் குமாரு... சாம்சங் நிறுவனத்தில் முதல் பெண் தலைவர் நியமனம்! - செல்போன் விற்பனை உலகளாவிய சந்தைப்படுத்துதல் மையம்

சாம்சங் நிறுவனத்தில், செல்போன் விற்பனைக்கான உலகளாவிய சந்தைப்படுத்துதல் மையத்தின் தலைவராக லீ யங் ஹீ என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். சாம்சங்கில் பெண் தலைவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

Samsung
Samsung
author img

By

Published : Dec 5, 2022, 5:33 PM IST

சியோல்: தென்கொரியாவைத் தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், செல்போன், டிவி, ஏசி உள்ளிட்டப் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. உலகின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக சாம்சங் உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

லீ ஜே யோங் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி, சாம்சங் குழுமத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்குப் புதிய தலைவர்களை நியமித்தார். அந்த வகையில், சாம்சங் நிறுவனத்தின், செல்போன் விற்பனைக்கான உலகளாவிய சந்தைப்படுத்துதல் மையத்தின் தலைவராக லீ யங் ஹீ என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

லீ யங் ஹீ கடந்த 2007ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு, சாம்சங் செல்போன்களுக்கான உலகளாவிய சந்தைப்படுத்துதல் மையத்தின் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.

இவர் சாம்சங் கேலக்ஸி செல்போன்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தி, அதில் வெற்றி கண்டவர். லீ பியுங் பங் குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. அதேபோல் சாம்சங் நிறுவனத்தில் ஒரு பெண் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:கல்லூரி மாணவர்களுக்கு மரண தண்டனை: ஐ.நா. கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.