லண்டன்(இங்கிலாந்து): இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
இதன்மூலம் கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்தில் 42 வயதில் மிக இளைய பிரதமர் எனும் அந்தஸ்தையும் 57ஆவது பிரதமர் எனும் அந்தஸ்தையும் பெறுகிறார், ரிஷி சுனக். முன்னதாக, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம்சார்லஸை ரிஷி சுனக் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் இடையேயான சந்திப்பு என்பது, பிரதமருக்கான அதிகாரத்தை ஒப்படைப்பதை மறைமுகமாக குறிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய ராஜ்ஜிய நாடுகள் வெளியேறும் பிரெக்ஸிட் நிகழ்வுகளின்மூலம் இங்கிலாந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக தான் நாள்தோறும் உழைக்கப்போவதாகவும், ஆனால் அதை அடைய கடினமான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் 57ஆவது பிரதமராகப்பதவியேற்று உரையாற்றிய ரிஷி சுனக், "இப்போது நம் நாடு ஒரு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கரோனா பாதிப்பு இன்னும் நீடிக்கிறது. உக்ரைன் - ரஷ்ய இடையிலான போர் உலகம் முழுவதும் வளமிக்க சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது.
லிஸ் டிரஸ் இந்த நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த விரும்புவதில் தவறில்லை. அது ஒரு உன்னதமான நோக்கம். மாற்றத்தை உருவாக்குவதற்கான லிஸ் டிரஸின் முயற்சியை நான் பாராட்டினேன். ஆனால், சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றைச் சரிசெய்வதற்காகவே எனது கட்சியின் தலைவராகவும், உங்கள் பிரதமராகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதை இந்த அரசாங்கத்தின் செயல்திட்ட அடிநாதமாக வைப்பேன். அது கடினமானதுதான்.
ஆனால், கரோனா காலத்தில் நிதி அமைச்சராக நான் பணிபுரிந்ததை மக்களாகிய நீங்கள் பார்த்தீர்கள். பொதுமக்களையும் வணிகங்களையும் பாதுகாக்க, ஃபர்லோ போன்ற திட்டங்களுடன் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். எப்போதும் கட்டுப்பாடுகள் உள்ளன. முன்பை விட இப்போது, நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். சவால்களின்போது அதே இரக்கத்துடன் நான் பணிபுரிவேன்.
அடுத்த தலைமுறையினர் நமது கடனை அடைக்கும் அளவுக்கு விடமாட்டோம் என்று லிஸ் டிரஸ் கூறினார். நான் நமது நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன். அதை உங்களுக்கு வழங்குவதற்காக நான் நாள்தோறும் உழைப்பேன்.
ரிஷி சுனக்கின் அரசாங்கம் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பிரதமராக போரிஸ் ஜான்சனின் "நம்பமுடியாத சாதனைகளுக்கு" தான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
எங்களது கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். குறிப்பாக, நாட்டின் வலுவான சுகாதார சேவை, பாதுகாப்பான வீதிகள், நாட்டின் எல்லைப்பாதுகாப்பு, நாட்டின் ராணுவத்தினருக்கான உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவோம்.
தொழில் முதலீடு, வேலைகளை உருவாக்கும் பிரெக்ஸிட்டின் வாய்ப்புகளைத் தழுவி, ஒரு பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் கட்டியெழுப்பவும் தான் பணியாற்றுவேன். இந்த தருணம் எவ்வளவு கடினமானது என்று எனக்குப் புரிகிறது.
கோடிக்கணக்கான பவுண்டுகள் இந்த கரோனா சூழலை எதிர்த்துப் போராட எங்களுக்குச் செலவானது. கடுமையான உக்ரைன் போர்ச்சூழலில் நமது நாட்டினரின் பாதுகாப்பான இடப்பெயர்வுப்பணிகள் ஆகியவற்றை நான் முழுமையாகப் பாராட்டுகிறேன்.
அனைத்து இக்கட்டான சூழல் எனக்கு நடந்த பிறகும், மக்களின் நம்பிக்கையை மீட்பதற்கு தான் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். நான் தைரியமாக இல்லை என்று மட்டுமே என்னால் கூற முடியும். நான் ஏற்றுக்கொண்ட உயர் பதவியை நான் நன்கறிவேன். அதன் பொறுப்புகளை உறுதியாக நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன். ஆனால், சேவை செய்வதற்கான வாய்ப்பு வரும்போது, என்னுடைய முடிவை நான் மட்டுமே செயல்படுத்தமுடியாது.
ஐக்கிய ராஜ்ஜியத்தை(UK) வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல உங்கள் முன் நான் இங்கே நிற்கிறேன். எனது கட்சியின் மிகச் சிறந்த பாரம்பரியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கத்தை அடையவும், உருவாக்கவும் முயற்சிப்பேன்.
நாங்கள் உருவாக்குவோம். பலர் செய்த தியாகங்களுக்குத் தகுதியான எதிர்காலம் நாளையும், அதன்பிறகு ஒவ்வொரு நாளும் கிடைக்கப் பாடுபடுவேன்' என்று அவர் தனது உரையை முடித்தார்.
45 நாட்கள் பதவியில் ஐக்கியராஜ்ஜியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ், பிரிட்டனின் மிகக் குறுகிய கால பிரதமர் ஆவார். முன்னதாக, பதவி விலகுவதற்கு முன், தனது இறுதி அமைச்சரவைக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய லிஸ் டிரஸ்
கடின உழைப்பாளி குடும்பங்களுக்கு உதவ தனது அரசு அவசரமாகவும் தீர்க்கமாகவும் செயல்பட்டதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 200 ஆண்டுகால இங்கிலாந்து சரித்திரத்தில் இளம்பிரதமராகும் ரிஷி சுனக் கடந்து வந்த பாதை!