ETV Bharat / international

"இந்தியாவுடன் போராட கனடா விரும்பவில்லை;ஆனால், சர்வதேச சட்டத்தை மீறினால்.." - கனடா பிரதமர்!

PM Trudeau said not Canada 'fight' with India: கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் ஏற்கனவே, இந்தியா மீது வைத்திருந்த குற்றச்சாட்டை முன்னிறுத்தி, 'பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை மீறினால் உலகமெங்கும் இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

PM Trudeau says fight with India not something Canada on the Hardeep Singh Nijjar Death case
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு பற்றி கனடா பிரதமர் பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 9:50 PM IST

ஒட்டாவா: கடந்த ஜூன் 18, 2023-ல் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் ஏஜெண்டுகளின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார். இதனால், இந்தியா - கனடா இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என இந்தியா நிராகரித்தது.

2020-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. கனடாவில் மர்ம நபர்களால் இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் ஒருமித்த உணர்வுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கனடா சார்பில் இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடாவின் கனடா குடிமகன் ஒருவரைக் கொன்றதில் இந்தியாவின் ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளனர் என்ற நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் அறிந்த ஆரம்பத்திலிருந்தே, இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு நாங்கள் இந்தியாவை அணுகினோம்' என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து, கனடாவின் நட்பு நாடான அமெரிக்காவிடம் சர்வதேச சட்டத்தையும், ஜனநாயகத்தின் அங்கமான இறையாண்மையையும் மீறிய இச்செயல் பற்றி தீவிரமாக எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார். "சட்ட அமலாக்கம் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைபுகளுடனும் இதற்காக தொடர்ந்து பணியாற்றுவோம். கனடா எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்காக நிற்கும் ஒரு நாடு, ஏனெனில் பெரிய நாடுகள் சர்வதேசத்தை மீறினால், மீண்டும் சரியானதைச் செய்யத் தொடங்கினால். விளைவுகள் இல்லாத சட்டம், பின்னர் முழு உலகமும் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானது," என்று அவர் மேலும் கூறினார்.

'சட்ட திட்டங்களின் படி கனடா இயங்கும் நிலையில், பெரிய நாடுகள் இதுபோன்று சட்டங்களை மீறி செயல்பட்டால் பின்னர் ஏற்படும் விளைவுகளால் உலமெங்கும் உள்ள அனைவரும் ஆபத்தை சந்திக்க நேரிடும்' என்றும் இதனை தெளிவுபடுத்த கனடா கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5வது இடத்தில் இந்தியா' - எல்லையில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.