லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா): ஃபைசர் பயோஎன்டெக் கோவிட்-19 என்ற தடுப்பூசிக்கு சென்ற மாதம் ஜூன் 17அன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த தடுப்பூசியில் செயல்பாடு குறித்த ஆய்வில் மூன்று குழந்தைகளுக்கு 3-µg அளவு ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை கரோனா பாதிக்கப்படாத 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளிடையே இந்த தடுப்பூசியின் செயல்திறன் 73.2 விழுக்காடாக இருந்தது. மேலும் இந்த ஆய்வுகள் குறித்து நிறுவனங்கள் அறிவித்த முடிவுகளை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் இதனைத்தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பயோஎன்டெக் நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனர் உகுர் சாஹின் கூறுகையில், "ஒமைக்ரான் BA.2 தொற்று மிகவும் பரவலாக இருந்த நேரத்தில், எங்கள் கோவிட்-19 தடுப்பூசியின் மூன்று 3-µg டோஸ்கள் இளம் குழந்தைகளுக்கு அதிக அளவிலான பாதுகாப்பை வழங்குகின்றன என்பதை இந்த முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் ஒமைக்ரான் BA.4/BA.5 தொற்றிற்கான பிவலன்ட் தடுப்பூசி இந்த குறிப்பிட்ட வயதினருக்கு இந்த துணைப்பிரிவுகளை நிவர்த்தி செய்ய உதவியது’ என்று கூறினார்.
இதையும் படிங்க:பிரமிக்க வைக்கும் "வியாழன்" கோளின் புகைப்படங்கள்... ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அடுத்தபணி