ETV Bharat / international

குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ராணுவத்தில் சேரலாம் - கனடா அறிவிப்பு

நிரந்தரக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ராணுவத்தில் சேரலாம் என கனடா அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ராணுவத்தில் சேரலாம் - கனடா அறிவிப்பு
குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ராணுவத்தில் சேரலாம் - கனடா அறிவிப்பு
author img

By

Published : Nov 14, 2022, 10:33 AM IST

டொராண்டோ: கனடாவின் இந்தியர்கள் உட்பட நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் தற்போது ராணுவத்தில் சேர தகுதியுடையவர்கள் என்று அந்நாட்டு ஆயுதப் படை (CAF) அறிவித்துள்ளது.

கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் இதற்கு முன்னதாக, ராணுவ வெளிநாட்டு விண்ணப்பதாரர் (SMFA) நுழைவுத் திட்டத்தின் கீழ் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர், தனிநபர்களுக்காண இந்த திட்டம் பயிற்சிச் செலவுகளைக் குறைக்கும் அல்லது பயிற்சி பெற்ற விமானி அல்லது மருத்துவர் போன்ற சிறப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும், என தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம், கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் மாறிவரும் உலகளாவிய புவிசார் அரசியல் நிலப்பரப்புகளுக்கு மத்தியில் CAF வளர வேண்டும் என்று கூறினார். பின்னர் செப்டம்பரில், ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப கடுமையான பற்றாக்குறை உள்ளது குறித்து CAF எச்சரிக்கை விடுத்தது.

இதன் பின்னர் சமீபத்தில், Royal Canadian Mounted Police (RCMP) கனடாவில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கும் வகையில் தங்களது ஆட்சேர்ப்பு செயல்முறையை மாற்றுவதாக அறிவித்துள்ளது.

கனடாவில் இறப்பு எண்ணிக்கை மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த கருவுறுதல் ஆகியவற்றின் அளவுகள் படிப்படியாக அதிகரித்து வருவதால் இதுபோன்ற பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்தோர் ராணுவத்தில் சேர முதன்மையாக கருதப்படுகிறார்கள்.

ஏனெனில் அவர்கள் பொதுவாக கனடாவிற்கு தங்கள் வேலை செய்யும் வயதில் வருவார்கள், இதனால் அவர்கள் அதிக உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கக்கூடும் என்று குடியேற்ற நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, கனடாவில் நிரந்தர குடியுரிமையுடன் எட்டு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வசித்து வருகின்றனர்.

இது மொத்த கனேடிய மக்கள் தொகையில் சுமார் 21.5 சதவீதம் பேர் ஆகும். அதே ஆண்டில், கனடா தனது வரலாற்றில் 405,000 புதிய குடியேறியவர்களை பதிவு செய்ததால், கிட்டத்தட்ட 100,000 இந்தியர்கள் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றனர். தரவுகளின்படி, கனடா 2022 மற்றும் 2024 க்கு இடையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை புதிதாக வரவேற்க வாய்ப்புள்ளது, இதனால் ராணுவத்தில் சேர நிரந்தரக் குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்ககாண வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரானில் அடங்க மறுக்கும் போராட்டங்கள்... பலனளிக்காமல் போகும் அரசின் முயற்சி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.