ETV Bharat / international

பாகிஸ்தானில் 22 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு - பாகிஸ்தானில் மின்சாரம் பற்றாக்குறை

பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் உள்பட 22 மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மின் தடை
மின் தடை
author img

By

Published : Jan 23, 2023, 1:16 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, எரிவாயு பற்றாக்குறை, விலை வாசி உயர்வு, எரிசக்தி துறை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்தித்துவருகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியை பொறுத்துவரையில் அண்டை நாடான இந்தியாவுடன் கலந்து பேசி சுமூக தீர்வு காண விரும்புவதாக அந்த நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே பாகிஸ்தான் அரசுக்கு கூடுதல் தலைவலியாக மின் தடை வந்துள்ளது. கடந்த ஆண்டு எரிபொருள் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி தடைபட்டு பாகிஸ்தான் வரலாறு காணாத மின் தடையை சந்தித்தது. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை மின் தடை ஏற்பட்டது.

அதன்பின் நிலைமை சீர் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் மீண்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்பட முக்கிய நகரங்களிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது. இரவு பகலாக மக்கள் மின்சாரமின்றி தவித்துவருகின்றனர்.

மின்மாற்றிகள் தொடர்பான சீரற்ற நிலையின் காரணமாக மின் தடை ஏற்பட்டதாகவும், பலூசிஸ்தான், குவெட்டா உள்பட 22 மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நாட்டின் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மின் விநியோகம் நடைபெறும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: போலந்து விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.