ETV Bharat / international

பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் 100 சடலங்கள் கண்டெடுப்பு - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

பாகிஸ்தானில் அரசு மருத்துவமனையின் பிணவறை மேற்கூரையில் அழுகிய நிலையில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகளும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

Pakistan
Pakistan
author img

By

Published : Oct 15, 2022, 2:11 PM IST

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் முல்தான் நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் பிணவறை மேற்கூரையில் அழுகிய நிலையில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இவை மாயமானவர்களின் சடலங்கள் என்றும், இதில் மர்மம் இருக்கிறது என்றும் வதந்திகளை தீயாய் பரவின. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

இதன் எதிரொலியாக அந்த சடலங்களை மீட்டு தகனம் செய்யவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சுகாதார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த மாநில முதலமைச்சர் பர்வேஸ் எலாஹி உத்தரவிட்டார். இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு சுகாதார செயலாளர் முஸாமில் பஷீர் தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்கவும் இந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட அந்த உடல்கள் மருத்துவ நோக்கங்களுக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும், இவை அரசு விதிகளின்படி மருத்துவ மாணவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் நிஷ்தார் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் மரியம் அஷர்ஃப் தெரிவித்துள்ளார். இது ஒரு அசாதாரணமான நிகழ்வு இல்லை என்றும், பிரிவினைவாதிகள் இதுதொடர்பாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: என் காதலியுடன் ஒரு முறை பேச விடுங்க...! கழுத்தில் கத்தியுடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.