இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்வறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் அணைகள் நிரம்பி வெள்ளம் புரண்டோடின, பாலங்கள் உடைந்தன, சாலைகள் துண்டிக்கப்பட்டன, வீடுகள் அடித்துசெல்லப்பட்டன. குடிநீர், உணவு பற்றாக்குறை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 124 பேர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. தேசிய பேரிடர் மீட்புக்குழு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சமும், வீடுகளை முற்றிலும் இழந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், 30 விழுக்காடிற்கும் மேல் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு வழக்குவதாக அறிவித்தார். இந்த பேரிடர் காலத்தில் அரசிடம் இருந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாதது, அத்தியாவசிய பொருள்களை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களாலேயே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: ஹிமாச்சலில் திடீர் வெள்ளம்... 150-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு...