காட்மாண்டூ: நேபாளத்தின் பொக்காரா நகரில் இருந்து ஜோம்சோம் நகரை நோக்கி தாரா ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று (மே 29) காலை 9.55 மணியளவில் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு நடுவானில் மாயமாகியுள்ளது. விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் உள்ளனர்.
அந்த விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சாம் நகரின் வானில் தெரிந்ததாகவும், பின்னர் அது தௌளகிரி மலை பகுதிக்கு திசை திருப்பப்பட்டதாகவும் மாவட்ட தலைமை அதிகாரி நேத்ர பிரசாத் தெரிவித்துள்ளார். அதன் பிறகே, விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.