ETV Bharat / international

2023-ல் 'சைக் மிஷன்' திட்டத்தை செயல்படுத்த நாசா திட்டம்

author img

By

Published : Oct 29, 2022, 1:39 PM IST

2023 ஆம் ஆண்டு 'சைக் மிஷன்' என்ற பெயரில் விண்வெளியிலுள்ள சிறுகோள்கள் குறித்து ஆய்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

வாஷிங்டன்(அமெரிக்கா): அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வரும் 2023 ஆம் ஆண்டு 'சைக் மிஷன்' என்ற பெயரில் விண்வெளியிலுள்ள (ஆஸ்ட்ராய்டு) சிறுகோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக, நாசா 2017 ஆம் ஆண்டில் ஏஜென்சியின் டிஸ்கவரி திட்டத்தின் ஒரு பகுதியான இத்திட்டத்தில் உலோகம் நிறைந்த சிறுகோள் ஒன்றை குறைந்த மதிப்பீட்டில் ஆய்வு செய்யத் தொடங்கியது.

நடப்பாண்டில், உள்ள பணி மேம்பாட்டுச் சிக்கல்களின் விளைவாக 'சைக்-2022' (Psyche mission) -ன் திட்டமிடப்பட்ட ஆய்வை மேற்கொள்ள இயலாமல் போனது. தொடர்ந்து, இது 2023-ல் வெற்றிகரமாக தொடங்குவதற்கு இந்த சிக்கல்களை மிஷன் சமாளிக்க முடியுமா என்ற மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அதன்படி "முன்னதாக, கற்றுக்கொண்ட பாடங்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படும் எனவும்; சைக் அதன் வாழ்நாளில் வழங்கும் அறிவியல் நுண்ணறிவுகள் மற்றும் நாம் வாழும் சொந்த கிரகத்தின் மையத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு பெரும் பங்களிக்கும். இதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று வாஷிங்டனில் உள்ள நாசாவின் அறிவியல் இயக்க இயக்குனரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் ஜுர்புசென் தெரிவித்துள்ளார்.

இதற்கான நாசா குழுவினர், 2023 ஏவுதல் தேதிக்கான தயாரிப்பில் விண்கலத்தின் விமான மென்பொருளின் சோதனையை மிஷன் நிறைவு செய்ய உள்ளனர். குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதற்காக திட்டமிட்டதைப் போன்று, வருகிற 2026-ல் செவ்வாய் கோளின் ஈர்ப்பு சக்தி உதவியுடன் விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட பாதைக்கு அனுப்பப்படும். சிறுகோள் சைக்கிற்கு, இந்தாண்டு ஏவுதல் தேதியுடன், சைக் விண்கலம் 2029 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறுகோளை அடையும் என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாகனங்களில் விரைவில் இணைய வசதி..! எலான் மஸ்க்கின் புதிய திட்டம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.