அமெரிக்கா: அமெரிக்காவின் வாஷிங்டனில் 14ஆவது யு தெருவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெருநகர காவல்துறை அதிகாரி உட்பட பலர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஊடகங்களின் தகவல் படி, துப்பாக்கிச் சூடு 14வது U தெருவில் "மோசெல்லா" என்றழைக்கப்படும் ஜுன்டீன்த் இசைக் கச்சேரி நடைபெற்ற இடத்தில் துப்பாக்கிச்சூட நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் எம்.பி.டி.(பெருநகர காவல்துறை அதிகாரி) அதிகாரி ஒருவர் காலில் சுடப்பட்டார். மேலும் உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இதனையடுத்து துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆலோசனை நடத்த உள்ளார். குழந்தைகள் மற்றும் குடும்பங்களை பாதுகாப்பதற்காக ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் அல்லது அவற்றை வாங்குவதற்கான வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக ஜூன் 1 ஆம் தேதி ஓக்லஹோமாவின் துல்சா நகரில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சைக்கிளில் இருந்து இடறி விழுந்த அமெரிக்க அதிபர் - பதறிப்போன பொதுமக்கள்