ETV Bharat / international

சூடானில் சூடுபிடிக்கும் மோதல்: ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு! - Khartoum

சூடான் நாட்டில் ராணுவத்திற்கும், உள்நாட்டு துணை ராணுவ அமைப்பிற்கும் இடையே பல மாதங்களாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஓம்டுர்மான் பகுதியில் ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sudan Air raid by Army leaves 22 dead in Omdurman
சூடானில் சூடுபிடிக்கும் சண்டை : ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு!
author img

By

Published : Jul 9, 2023, 10:31 AM IST

Updated : Jul 9, 2023, 10:42 AM IST

கார்டோம்: சூடான் நாட்டின் ராணுவத்திற்கும், உள்நாட்டு துணை ராணுவ அமைப்பிற்கும் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓம்டுர்மான் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த மோதலில் இதுவரை நடத்தப்பட்டு உள்ள தாக்குதல்களில், இது மிகவும் கொடூரமானது என்று உள்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக, சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தலைநகர் கார்ட்டோமுக்கு அடுத்த முக்கிய நகரமான ஓம்டுர்மானின் குடியிருப்புப் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இந்த விமானத் தாக்குதல் மிகவும் கொடிய ஒன்றாக கருதப்படுகிறது. தலைநகர் கார்ட்டோமில், கடந்த மாதம் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 5 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஓம்டுர்மான் நகரத்தில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து ராணுவம் தாக்கி உள்ளதாக துணை ராணுவ அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவர சம்பவங்களில், குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. அதில், ராணுவத் தலைவர் அப்டெல் பத்தாஹ் தலைமையிலான படை நடத்தி உள்ள இந்த வான்வெளித் தாக்குதலை கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களின் ஒத்துழைப்புடன் சூடான் ஆயுதப் படைகளால் (SAF) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். ஓம்டுர்மன் குடியிருப்பு பகுதியில் நிகழ்த்தப்பட்ட வான்வெளி தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக அப்பகுதிவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

ஓம்டுர்மான் நகரத்தின் மேற்குப் பகுதியில்தான், துணை ராணுவ அமைப்பின் அதிகாரத் தளமான டார்ஃபூர் அமைந்து உள்ளது. சமீப காலமாக, இப்பகுதியில் அதிக அளவில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 1,130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

2.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் சுமார் 7 லட்சம் பேர் அருகிலுள்ள நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். சூடானில் போரிடும் அமைப்புகளுக்கு மத்தியில் சவுதி மற்றும் அமெரிக்க நாடுகளால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட பல போர் நிறுத்த ஒப்பந்தங்கள், நாட்டின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறிவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: இலங்கை புத்த பிட்சு மீது தாக்குதல்.. 8 பேர் கைதானதன் பின்னணி என்ன?

Last Updated : Jul 9, 2023, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.