ETV Bharat / international

'ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' : 60ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட ராணியின் இறுதிச்சடங்கு - operation london bridge

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு உலகெங்கும் பலர் இரங்கல்களைத் தெரிவித்து வரும் நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட ராணியின் இறுதிச்சடங்கு குறித்து காணலாம்.

’ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ : 60 வருடங்களுக்கு முன்பு வகுக்கப்பட்ட ராணியின் இறுதி சடங்கு

author img

By

Published : Sep 9, 2022, 4:15 PM IST

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு உலகெங்கும் உள்ள அனைவரின் அனுதாபங்களையும், இரங்கல்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது 'ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' எனும் சொல் ஆங்காங்கே பேசப்பட்டு வருகிறது. இந்த வார்த்தையைக் கேட்டதும் யாரும் இதை ஏதோ ஒரு ராணுவத்திட்டமென்று எண்ணிவிட வேண்டாம்.

இது மறைந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு குறித்த ரகசிய சொல், அதாவது ‘கோட்’ வார்த்தை. அதுவென்ன இறுதிச்சடங்கிற்கு ’கோட்’ வார்த்தைகளெல்லாம் எனக் கேட்கலாம். ஆம். மறைந்த ராணி எலிசபெத்திற்கு மட்டுமல்ல; பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தில் மறைந்த அனைவரின் இறுதிச்சடங்குகளுக்கும் கோட் வார்த்தைகள் இருந்தன.

ராணி எலிசபெத், தனது அரியணையில் 70 ஆண்டுகள் காலம் இருந்தவர். அவருக்கு குதிரை சவாரி செய்யும் பழக்கம் உண்டென்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதை அவர் சிறு வயதிலிருந்தே விரும்பியிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாடே கரோனா கட்டுப்பாட்டு ஊரடங்கில் தத்தளித்தபோதுகூட, அவர் தனது பொழுதுப்போக்கிற்காக குதிரை சவாரி செய்தார்.

அவ்வளவு பெரிதாக உடற்பயிற்சிகளில் ராணி எலிசபெத்திற்கு ஆர்வம் இல்லாதிருப்பினும் தனது செல்லப்பிராணியுடன் தினமும் நடப்பதை விரும்பியிருந்தார். தினமும் நான்கு முறை ஜின் அருந்துவது, மான் மற்றும் மாட்டுக்கறிகளை விரும்பி உண்ணுவதென ஏராளமான தனக்கெனத் தனி பழக்கங்களை ராணி எலிசபெத் கடைபிடித்து வந்தார்.

இத்தகைய ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டது என்றால் நம்பமுடிகிறதா... 1960களில் ‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ எனும் பெயரில் ஒருவேளை ராணி வெளிநாட்டில் இறந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கூட எழுதிவைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ராணி இறக்க நேர்ந்தால் என்ன செய்யவேண்டுமென சிறப்பு வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மறுபக்கம் ஸ்காட்லாந்தில் மறைந்தால், அதற்கும் தனியே சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ராணியின் உடலை ரயிலில் எப்படிக் கொண்டுவரவேண்டுமென்று கூட அப்போதே திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாட்டில் இறந்தால் ராணியின் தகனத்தை, எந்த விமானத்தில் கொண்டு வரவேண்டுமென்றும்கூட அப்போதே முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதைத் தான் பிரிட்டிஷ் அரசு, சர்ச் ஆஃப் இங்கிலாந்து, காவல்துறை, ஊடகங்கள் என அனைவரும் 'ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' என வகுத்துள்ளனர். அதில், இந்த செய்தியை எந்த இரண்டு ஊடகத்திற்கு முதலில் தெரிவிப்பது என்பது வரை வகுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு "மருதநாயகம்"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.