ETV Bharat / international

Israel - Hamas conflict : ஹாமாஸ் விமான படை தளபதி கொலை? - இஸ்ரேல் பாதுகாப்பு படை!

Hamas Air Force chief killed in airstrike : ஹாமாஸ் குழுவின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த குழுவின் விமான படை தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 3:42 PM IST

Hamas
Hamas

டெல் அவிவ் : ஹாமாஸ் குழுவின் விமான படை தளபதியை கொன்று விட்டதாக இஸ்ரேல் விமான படை தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நூற்றாண்டுகள் கடந்து பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7வது நாளாக இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பேரழிவின் பிடியில் உள்ள காசாவில் இருந்து மக்கள் வெளியேறுமாறு ஐ.நா. தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் இதுவரை ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதேபோல் இஸ்ரேல் தரப்பில் இதுவரை ஆயிரத்து 200 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் சேர்த்து உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கியன் நிலையில், காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரித்து.

இந்நிலையில், ஹமாஸ் குழுவின் விமான படைத் தளபதியை கொன்று விட்டதாக இஸ்ரே விமான படை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், ஹமாஸ் பயங்கரவாத குழுவின் தலைமையகத்தின் மீது கடந்த இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் காசா நகர பொறுப்பை மேற்கொண்டு வந்த முராத் அபு முராத் என்ற ஹாமாஸ் விமான படை தளபதி கொல்லப்பட்டதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் லெபனான் வழியாக இஸ்ரேலுக்கு ஊடுருவ முயன்ற ஐடிஎப் என்ற பயங்கரவாத குழுவின் முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கொடுக்கும் அபாய எச்சரிக்கைகளை அறிந்து மக்கள் அடுத்தடுத்து நகர்ந்து வருவதாகவும், தெற்கு பகுதியில் காசா மக்களின் நடமாட்டம் இருப்பது தெரியவந்து உள்ளதாகவும் இஸ்ரே ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : தமிழகம் வந்த சோனியா காந்தியின் அரசியல் திட்டம் என்ன? - காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் முக்கிய ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.