ETV Bharat / international

சிங்கப்பூரில் கப்பலில் இருந்து விழுந்த 64 வயது இந்திய பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Aug 2, 2023, 1:21 PM IST

சிங்கப்பூரில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி சொகுசு கப்பலில் இருந்து தவறி விழுந்த 64 வயது இந்தியப் பெண் உயிரிழந்ததாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Indian woman who fell into Singapore Strait from cruise ship has died
சிங்கப்பூரில் கப்பலில் இருந்து விழுந்த 64 வயது இந்திய பெண் உயிரிழப்பு

  • 1/2 My mother was travelling in Royal Carrribean cruise (spectrum of the seas) from Singapore. She has gone missing from the ship since this morning. Cruise staff are saying she jumped, but they have not shown us any footage and are washing their hands off @DrSJaishankar

    — Apoorv Sahani (@SahaniApps) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் உள்ள ஜலசந்தியில் ஜூலை 31 ஆம் தேதி திங்கட்கிழமை உல்லாசக் கப்பலில் பயணம் செய்த தனது தாய் கடலில் விழுந்து உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்தியாவைச் சேர்ந்தவர் ரீட்டா சஹானி (64) மற்றும் அவரது கணவர் ஜகேஷ் சஹானி (70) தம்பதியினர். இவர்களுக்கு அபூர்வ் சஹானி மற்றும் விவேக் சஹானி என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவர் மனைவி இருவரும் ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸில் என்ற சொகுசுக் கப்பலில் பயணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று ரீட்டா சஹானி கப்பலில் இல்லாததை அறிந்த அவரது கணவர் ஜகேஷ் சஹானி, தனது மனைவியைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ரீட்டா சஹானியை கப்பலில் தேடும் பணியில் கப்பல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடும் பணியின் நடுவே ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவரது மகன் அபூர்வ சஹானி, கப்பலில் இருந்து ஏதோ விழுந்த சப்தம் கேட்டதாக எச்சரிக்கை ஒலி கிடைத்தாக கப்பல் பணியாளர்கள் கூறியதாகவும், ஆனால் அது தனது தாய் ரீட்டா சஹானியாக இருக்காது எனவும், தனது தாய்க்கு நீச்சல் தெரியாது என்றும், அபூர்வ சஹானி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸில் இருந்த சிசிவிடி காட்சி மூலம் சோதனை செய்தனர். அதில் ரீட்டா சஹானி கப்பலில் இருந்து குதித்தது பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்த 64 பெண் ரீட்டா சஹானி கப்பலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அந்த பெண்ணின் சடலத்தை தேடும் பணியில், சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் குதித்ததற்கான காரணத்தையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதாவது அந்த கடல் பகுதியானது 113 கிலோ மீட்டர் நீளமும், 19 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மலாக்கா ஜலசந்திக்கும், தென்சீனக் கடலுக்கும் இடையேயான போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் ( The High Commission of India in Singapore) கூறியது, "இந்த சம்பவம் குறித்து தெரிந்ததில் இருந்து தற்போது வரை நாங்கள் அந்த பெண்ணின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளோம். மேலும் சிங்கப்பூர் அதிகாரிகளுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், சட்ட நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றோம்.

இந்நிலையில் ராயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தின் இந்தியத் தலைவரிடம் ஒத்துழைப்பு வழங்குவதற்காகத் தொடர்பு கொண்டுள்ளதுடன், தற்போது இந்நேரத்தில் அந்த குடும்பத்தை ஆதரிப்பதில் முழுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெண்ணின் கணவர் கூறிகையில், "திங்கள்கிழமை காலை பினாங்கில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் வழியில் ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸில் கப்பலில் 4 நாள் பயணத்தை மேற்கொண்டோம். ஆனால் மறுநாள் காலையில் தான் எழுந்து பார்த்தபோது, தனது மனைவியை தங்கள் அறையில் இருந்து காணவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அவரது மகன் அபூர்வ் சஹானி கூறியது, "முதலில் தனது தாய் காணவில்லை என்று தெரிந்ததும், அவருக்கு நீச்சல் தெரியாது ஆகையால் எங்காவது இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் கப்பலில் இருந்த சிசிடிவி அடிப்படையில் உறுதி செய்யப்பட்டவும் தனது நம்பிக்கை வீணாகிவிட்டது. தற்போது வரை தனது தாயை தேடுவதற்காக உதவி செய்யும் நல்உள்ளங்களுக்கும், தங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி" என தனது ட்விட்டர் பக்கத்தில் தாய் இறந்ததை உறுதி செய்து பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.