ETV Bharat / international

"இந்தியா, யுஏஇ நட்புறவால் மாறி வரும் உலகத்தை வடிவமைக்க முடியும்" - EAM ஜெய்சங்கர்!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவதாகவும், அதைப் பயன்படுத்தி மாறி வரும் உலகத்தை வடிவமைக்க முடியும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

India
India
author img

By

Published : Dec 12, 2022, 9:28 PM IST

அபுதாபி: இந்தியா குளோபல் ஃபோரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று(டிச.12) தொடங்கியது. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முன்னணி அரசியல், வணிக மற்றும் கலாச்சார ஆளுமைகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாகும். இது வரும் 16ஆம் தேதி வரை, துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்தியா ஜி20 தலைமையை ஏற்ற பிறகு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா மற்றும் யுஏஇயின் உறவுகள் மேம்பட்டு வருவதாகவும், அதைப் பயன்படுத்தி உலகத்தை வடிவமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அப்போது பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நீண்ட காலமாக சுமூகமான உறவுகள் இருக்கின்றன. இந்த நட்புறவைப் பயன்படுத்தி மாறிவரும் உலகை வடிவமைக்க முடியும். இருநாடுகளும் பல்வேறு வகையிலான லட்சிய உறவுகளை கொண்டுள்ளதாகவும், இதை மேலும் மேம்படுத்தினால் அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.

நமது நட்புறவின் காரணமாகவே விரிவான பொருளாதார ஒப்பந்தத்தை மிக விரைவாக முடிக்க முடிந்தது. இப்போது நாம் புதிய ஒப்பந்தங்களை நோக்கி நகர்கிறோம். இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வர்த்தக உறவுகள் சிறப்பாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் தற்போது இந்தியாவின் 3வது பெரிய வர்த்தக பங்குதாரராக இருக்கிறது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் இருக்கிறது.

பிற வெளிநாடுகளை விட அமீரகத்தில் அதிகளவு இந்தியர்கள் வாழ்கின்றனர். அதனால் இந்தியாவுக்கு பல வகைகளில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி யுஏஇக்கு வந்த பிறகு இருநாடுகள் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் இந்தியா-யுஏஇ உறவுகள் மேலும் மேம்படும்" என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் அமலுக்கு வந்தது ட்விட்டர் "ப்ளூ டிக்"; ட்வீட்களின் எழுத்து வரம்பு அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.