டெல்லி: இந்தியா மற்றும் கனடா வரலாற்றில் இல்லாத நிகழ்வாக, சமீப காலமாக இருநாடுகளிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடா வாழ் இந்தியரும், சீக்கிய பிரிவினைவாதத் தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் இந்தியாவும் சம்பந்தப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வந்தது, இந்தியா. முன்னதாக நிஜ்ஜார் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர் என்றும், பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் அறிவித்திருந்தது.
இரு நாடுகளிடையே மோதல் போக்கு அதிகரித்த நிலையில், இந்திய நாட்டிலுள்ள கனடா தூதர்களை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கனடாவிற்கான இந்திய தூதர்கள் 21 பேர் இருந்து வந்த நிலையில், இந்தியாவிற்கான கனடா தூதர்கள் 62 பேர் உள்ளனர். இதில் 41 தூதர்கள் மத்திய அரசின் உத்தரவின்படி, வெளியேறினர்.
இந்த எண்ணிக்கையை சரிசமமாக நீடிக்க வேண்டும் என்றும், அதிக எண்ணிக்கையில் தூதர்கள் இருப்பதால் நாட்டின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்க இயலாத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது, இந்தியா. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியா இப்படி நாட்டின் தூதர்களை குறைப்பது சர்வதேச சட்ட மீறல் என்று கூறியது.
இதன் அடிப்படையில், இந்தியாவிற்கான 62 கனடா தூதர்களில், இந்தியாவில் தங்கி இருந்த 41 தூதர்களும் நாட்டை விட்டு வெளியேற இந்தியா நேற்று (அக்.20) வரை காலக்கெடு வகுத்தது. அதனால் இந்தியாவில் இருந்த 41 கனடா தூதர்களும் அவர்களது குடும்பங்களுடன் வெளியேறியுள்ளனர். இதனை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ நேற்று (அக்.20) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இரு நாடுகளுக்கு இடையே இது வரை இல்லாத அளவிற்கு மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டு கனடா உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பின்னரும் இந்தியாவுடனான பிளவை அதிகரிக்க விரும்பவில்லை.
நிஜ்ஜாரின் மரணம் தொடர்பாக கனடா அதிகாரிகளின் விசாரணைக்கு இந்திய அதிகாரிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தூதர்களின் எண்ணிக்கைய குறைப்பதன் மூலம் சர்வதேச சட்ட விதிமீறலில் ஈடுபட்டுள்ளது, இந்தியா. இந்த செயல் அனைத்து நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்கள் வெளியேற்றம் - கனடா வெளியுறவுத்துறை அமைச்சர்