போர்ட்லேண்ட்: டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணும் பயணத்தின்போது வெடித்த நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை நேற்று (ஜுன் 28) தெரிவித்து உள்ளது.
வடக்கு அட்லாண்டிக் கடலின் மேற்பரப்பில் இருந்து 12,000 அடிக்கு (3,658 மீட்டர்) கீழ் உள்ள கடல் பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட டைட்டன் கப்பலின் கழிவுகள், அமெரிக்காவின செயின்ட் ஜான்ஸ், நியூபவுண்ட்லாந்திற்கு வந்து சேர்ந்ததாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த துண்டுகள் கனடா நாட்டைச் சேர்ந்த கடலோரக் காவல் படை தளத்தில் இறக்கப்பட்டு உள்ளன.
விபத்துக்குள்ளான கப்பலின் இடிபாடுகளில் இருந்து, எஞ்சியவற்றை மீட்பதும், ஆய்வு செய்வதும் மற்றும் கடந்த வாரத்தில் நிகழ்ந்த டைட்டன் கப்பல் வெடித்த நிகழ்வு, அதில் பயணம் செய்த 5 பேரின் நிலை உள்ளிட்டவைகள், இந்த விசாரணையின் முக்கிய பகுதியாக உள்ளது. 22 அடி (6.7 மீட்டர்) நீளம் கொண்ட இந்த கப்பலில் இருந்து, பல நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, பல்வேறு கழிவுகள் மீட்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க கடலோர காவல் படையின் தலைமை கேப்டன் ஜேசன் நியூபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "டைட்டனின் பேரழிவு இழப்புக்கு வழிவகுத்த காரணிகளைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் கணிசமான அளவு வேலை செய்ய வேண்டி உள்ளது. மேலும் இது போன்ற ஒரு சோகம் மீண்டும் நிகழாமல் இருப்பதை இது உறுதிப்படுத்த உதவும்" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
உடல் பாகங்கள் என்று சந்தேகிக்கப்படும் கழிவுகள், அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முறையான பகுப்பாய்வு மேற்க்கொள்ளப்பட உள்ளது. டைட்டன் கப்பல் விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கடல்சார் புலனாய்வு வாரியம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக நியூபர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த ஆய்வு மற்றும் விசாரணையின் முடிவில், கப்பல் வெடித்து சிதறியதற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டைட்டன் நீர்மூழ்கி கப்பல், ஜூன் 18ஆம் தேதி வெடித்த இடத்தில் இருந்து அதன் கழிவுகள் சுமார் 12,500 அடி (3,810 மீட்டர்) நீருக்கடியிலும், டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1,600 அடி (488 மீட்டர்) தொலைவிலும் கடல் தளத்தில் அமைந்திருந்தன.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் அரசு நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்க கடலோர காவல்படை இந்த விசாரணையை வழிநடத்த உள்ளது. கழிவுகள் மீட்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அதிகாரிகள் வெளியிடவில்லை என்று நீருக்கடியில் தன்னாட்சி வாகனங்களை வடிவமைத்து இயக்கும் மற்றும் கடலோர காவல்படையின் ஆலோசகராக பணியாற்றி வரும் வூட்ஸ் ஹோல் ஓசியானோகிராஃபிக் நிறுவனத்திn ஆய்வக இயக்குநர் கார்ல் ஹார்ட்ஸ் ஃபீல்ட் தெரிவித்து உள்ளார்.
மீட்கப்பட்டு உள்ள கழிவுகளின் இயற்பியல் தன்மையை ஆராய்ந்து, டைட்டன் கப்பலுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய முக்கிய தடயங்களை வெளிப்படுத்தக் கூடும். மேலும் நீரில் மூழ்கக் கூடிய கருவிகளால் மின்னணு தரவு பதிவு செய்யப்பட முடியும் என்று ஹார்ட்ஸ்ஃபீல்ட் குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Ocean Gate Expeditions நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல், பஹாமாஸில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. டைட்டன் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டபோது, வாஷிங்டனின் எவரெட்டில் உள்ள Ocean Gate நிறுவனம் மூடப்பட்டது. டைட்டனின் தாய் கப்பலான போலார் பிரின்ஸ் தற்போது கனடாவில் உள்ளது.
இந்த பயணத்தில் பங்கேற்க பயணிகளிடம் இருந்து, தலா 2,50,000 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டைட்டன் கப்பலின் வெடிப்பு சம்பவம், கடலுக்கடியில் ஆய்வு நடவடிக்கைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: Madurai Metro: வைகை ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் பாதை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு