மெக்சிகோ சிட்டி: குவானவோட்டோ(Guanajuato) மாகாணத்தின் புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். போலீசார் சுதாரித்து பதில் தாக்குதல் நடத்துவதற்குள் காவல் நிலையம் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். மேலும் காவல் நிலையம் வந்த பொது மக்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சுதாரித்துக் கொண்டு போலீசார் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
போலீசாரும் சரமாரியாக சுட்டதில் கொள்ளையர்கள் சிலரும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாத நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், காவல் நிலைய பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிரவதா செயலா என போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேநேரம் குவானவோட்டோ பகுதியில் இதுபோன்ற தாக்குதல் சாதாரண விஷயமாக கருதப்படுகிறது.
மெக்சிகோவில் உள்ள 32 மாகாணங்களில், குவானவோட்டோவில் மட்டும் தான் அதிகளவிலான மனிதத் தன்மையற்ற படுகொலை நடந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிஃபா உலகக் கோப்பை போட்டி ...ஒடிசாவில் கால்பந்து சிற்பம்