நாஷ்வில்: அமெரிக்காவில் தொடக்க பள்ளியில் புகுந்த நபர் நடத்திய கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். பள்ளியின் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதே பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும் கையில் இரண்டு அசால்ட் ஸ்டைல் ரைபில் துப்பாக்கி மற்றும் கைத் துப்பாக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 28 வயதான திருநங்கை என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவரான அவர், மேலும் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். திருநங்கை உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரிடம் இருந்து துப்பாக்கிகள், பள்ளியின் வரைபடம், சதித் திட்ட குறிப்புகள், போலீசார் சுற்றி வளைத்தால் தப்பிப்பது குறித்த தகவல்கள் உள்ளிட்ட கோப்புகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஆட்ரி ஹேல் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பாலினம் குறித்த சந்தேகம் முதலில் நிலவியது. அவரது சமூக வலைதள பக்கத்தில் ஆண் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் பின்னர் அவர் மூன்றாம் பாலினத்தவர் என அடையாளம் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் உள்பட 3 குழந்தைகள், பள்ளியின் நிர்வாக உறுப்பினர், மாற்று ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் என மொத்தம் 6 பேர்
போலீசர் தெரிவித்து உள்ளனர். பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் நிகழ்ந்ததோ என பயத்தில் பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு பள்ளியை நோக்கி ஓடினர். அமெரிக்காவில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பில் உச்சபட்ச அதிகாரம் காணப்படும். பள்ளி வாகனத்தை முந்திச் செல்வதில் கவன்க் குறைவு, பள்ளி வாகனங்கள் அருகில் அநாவசியமின்றி செல்வது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு.
அப்படி இருக்கும் பட்சத்தில், அங்குள்ள பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு இதேபோல் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமும், தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கி வன்முறைகளும் தேசத்தின் ஆன்மாவை கிழிக்கிறது என்றார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் துப்பாக்கி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இந்திய நீதிமன்றங்களில் ராகுல் காந்தி வழக்கை உன்னிப்பாக கவனிக்கிறோம்" - அமெரிக்கா அதிரடி!