ETV Bharat / international

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் - டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு? - Donald Trump

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் டிரம்ப் கைது செய்யப்பட்டால் அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே கிரிமினல் வழக்கில் கைதான முதல் அதிபர் என்ற மிக மோசமான அவப் பெயரை டிரம்ப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 31, 2023, 2:32 PM IST

Updated : Mar 31, 2023, 2:53 PM IST

நியூ யார்க் : 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஆபாச பட நடிகைக்கு பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அதிபர் டிரம்ப் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், முக்கிய நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 45 வது அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த டொனால்ட் டிரம்ப் மீது அபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். டொனால்டு டிரம்ப் தன்னுடன் சில ஆண்டுகள் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஸ்டார்மி குற்றஞ்சாட்டினார்.

ஸ்டார்மி டேனியல் கூறியது அப்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வேகமாக பரவின. அதேநேரம் இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இதற்கு முன்னரும் பல்வேறு பெண்கள் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் புகார்களை கூறி வந்த நிலையில் அதையும் அவர் மறுத்து வந்தார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலின் போது இது பற்றி பேசாமல் இருக்க ஸ்டார்மி டேனியலுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் அதிபர் தேர்தல் செலவுக்கான நிதியில் இருந்து அந்த பணம் ஸ்டார்மி டேனியலுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் களமிறங்க உள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் பூதாகரம் அடைந்தது. முன்னாள் அதிபர் டிரம்ப் குறித்த பெண்களின் பாலியல் புகார்களை நியூயார்க் மான்ஹாட்டன் அட்டார்னி விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக நியூயார்க் மான்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் அலுவலத்தில் இருந்து வழக்கு தொடர்பான விவரங்கள் கசிந்த நிலையில், தான் கைது செய்யப்பட உள்ளதாக டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது மாவட்ட நீதிமன்றம் கிரிமினில் வழக்கு பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றக் குழு விசாரணை நடத்தி, அதிபர் டிரம்ப் குறித்து கருத்து வெளியிடாமல் இருக்க ஸ்டார்மி டேனியலுக்கு ஷெல் கம்பெனி மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது தெரிய வந்ததாக கூறப்பட்டு உள்ளது. மேலும் அதே 2016 ஆம் ஆண்டு முன்னாள் பிளே பாய் மாடல் கெரென் மெக்டவுகலின் "கேட்ச் அண்ட் ஸ்கில்" பத்திரிக்கை விவகாரத்தை மறைக்க 1 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்க டிரம்பின் வழக்கறிஞர் மைக்கெல் கோகென் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் மான்ஹட்டன் நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் மீது தொடர் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. அப்படி டிரம்ப் கைது செய்யப்பட்டால் அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே குற்ற வழக்கில் கைதாகும் முதல் முன்னாள் அதிபர் என்ற மிக மோசமான அவப்பெயரை டிரம்ப் சம்பாதிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2023 - தொடக்க ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் பலப்பரீட்சை!

Last Updated : Mar 31, 2023, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.