புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து செய்தி சேகரிக்கச்சென்றபோது இரண்டாவது முறையாக மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 வயது சிறுமி, செய்தியாளர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியவராத நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்லாண்டோ நகரில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் உள்பட இருவர் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் செய்தி நிறுவன ஊழியர்கள் இருவர், 9 வயது சிறுமி, அவரது தாயார் படுகாயம் அடைந்தனர்.
4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 9 வயது சிறுமி மற்றும் செய்தியாளர் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுமியின் தாய் மற்றும் மற்றொரு செய்தி நிறுவன ஊழியர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Our hearts go out to the family of the journalist killed today and the crew member injured in Orange County, Florida, as well as the whole Spectrum News team.
— Karine Jean-Pierre (@PressSec) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Our hearts go out to the family of the journalist killed today and the crew member injured in Orange County, Florida, as well as the whole Spectrum News team.
— Karine Jean-Pierre (@PressSec) February 23, 2023Our hearts go out to the family of the journalist killed today and the crew member injured in Orange County, Florida, as well as the whole Spectrum News team.
— Karine Jean-Pierre (@PressSec) February 23, 2023
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரிய வராத நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடும் நிலையில், அதனால் பல அப்பாவி உயிர்கள் பலியான வண்ணம் உள்ளன.
நியூயார்க் உள்ளிட்டப் பல்வேறு மாகாணங்களில் துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க அதிகபட்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அண்டை மாகாணங்களில் போதிய தடைகள் இல்லாததால், இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் சென்ற 6 பேர் மாயம்?