ETV Bharat / international

பதைபதைக்கும் வீடியோ... சீனாவில் பற்றி எரிந்த 42 மாடி கட்டடம்...

சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவில் பற்றி எறிந்த 42 மாடி கட்டடம்
சீனாவில் பற்றி எறிந்த 42 மாடி கட்டடம்
author img

By

Published : Sep 16, 2022, 6:52 PM IST

Updated : Sep 16, 2022, 7:09 PM IST

பெங்ஜிங்: சீனாவின் ஹுனான் மாகாண தலைநகர் சாங்ஷாவில் உள்ள "ஸ்டோரேய் ஸ்கைகிராப்பர்" என்னும் 42 மாடி கட்டடத்தில் இன்று (செப். 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து சாங்ஷா போலீசார் தரப்பில், "இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டது. இந்த கட்டடத்ததில் டெலிகாம் நிறுவனம் செயல்பட்டுவந்தது. 280 தீயணைப்பு வீரர்கள் மூலம் தீ போராடி அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

சீனாவில் பற்றி எரிந்த 42 மாடி கட்டடம்

நான்கு அடுக்குகளும், வெளிப்புற சுவர்களும் மட்டுமே முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்த கட்டடத்திற்குள் சிலர் இருப்பதுபோல் வெளியாகும் வீடியோக்களை மக்கள் நம்ப வேண்டாம். தீ ஏற்பட்ட உடனேயே அனைவரும் வெளியேறிவிட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டடம் 720 அடி உயரம் கொண்டது. அவ்வளவு உயரம் முழுவதும் தீ பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும் - பிரதமர் மோடி

Last Updated : Sep 16, 2022, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.