மெக்சிகோ: மெக்சிகோவின் மத்திய பசிபிக் கடற்கரையில் நேற்று (செப்.19) திங்கள்கிழமை 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிதளவில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக இருந்த நிலநடுக்கம், அக்விலாவுக்கு தென்கிழக்கே 37 கிமீ (23 மைல்) தொலைவில் கோலிமா மற்றும் மைக்கோகன் மாநிலங்களின் எல்லைக்கு அருகே 15.1 கிமீ (9.4 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கோல்கோமன் நகரத்தில் உள்ள கட்டடங்களில் சில விரிசல்களை தாண்டி அந்த மாநிலத்தில் குறிப்பிடத்தக்க சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று பொது பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை தொடர்பாக எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு, நிலநடுக்கத்தின் இருப்பிடம் கடலில் இல்லாததால் கடல் மட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என விளக்கம் தரப்பட்டது.
இவ்விளக்கத்தை, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் ஏற்கவில்லை. நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 186 மைல்கள் (300 கிமீ) தொலைவில் உள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான சுனாமி அலைகள் சாத்தியமாகும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.
இதையும் படிங்க: இறைவன் முன் அனைவரும் சமம்.. யாருக்கும் முதல் மரியாதை கிடையாது...