வெலிங்டன் (நியூசிலாந்து): சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தின் மையம் ஹொனியாராவுக்கு தென்மேற்கே 56 கிலோமீட்டர் தொலைவில் கடலில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் வரை அலைகள் உயரமாக எழக்ககூடும் என கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில், சாலமன் தீவுகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எல்லையில் ஊடுருவ முயற்சி ஒருவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது