கார்டூம்: சூடானின் முழுவதும் தொடர்ந்து பருவமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கஸ்ஸாலா, தெற்கு டார்பூர், மத்திய டார்பூர், தெற்கு கோர்டோபான், ஒயிட் நைல் உள்ளிட்ட 18 மாகாணங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதில் 6 மாகாணங்களுக்கு அவசர நிலை பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 18,200-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. 25,600 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. 1,46,200 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டள்ளனர். 83 பேர் உயிரிழந்தனர்.
36 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சூடானில் வெள்ளத்தால் 3,14,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடானில் பருவமழை ஆண்டுதோறும் மே மாதம் முதல் செப்டம்பர் வரை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீனாவில் ஒரே இரவில் பேய்மழை... 16 பேர் உயிரிழப்பு... 36 பேர் மாயம்...