இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற கப்பல் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 12 குழந்தைகள் உள்பட 59 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 81 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வேறு யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா எனக் கடற்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீட்டர் தூரத்தில் பறைகள் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோரச் சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும் இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க, முறையற்ற வகையில் புலம்பெயரும் பயணங்களைத் தடுப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறையில் மோதல்: பாடகர் மூஸ்வாலா கொலையில் கைதான 2 கைதிகள் உயிரிழப்பு