ETV Bharat / international

தைவானை மிரட்டும் சீனா - போர் பயிற்சியை நீடித்து அறிவிப்பு! - China Dril in taiwan

தைவான் கடற்பரப்பில் வரும் திங்கட்கிழமை வரை போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக சீனா அறிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 8, 2023, 12:16 PM IST

டெல்லி : 1949 ஆம் ஆண்டில் சீனாவின் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, பல்வேறு தீவுகளை அங்கமாக கொண்ட தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சீனா, தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தைவான் அதிபர் சாய் இங் வென், தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுப் பயணத்தின் இடையே அமெரிக்காவுக்கு சென்ற அவர், அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கரத்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், தைவானை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டு கடற்பரப்பில் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீன ராணுவத்தின் 13 போர் விமான்ங்கள், 3 போர்க் கப்பல்களை தங்கள் நாட்டு கடல் எல்லையில் பார்த்த்தாக தைவான் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : மது போதையில் எமர்ஜென்சி எக்சிட்டை திறக்க முயற்சி - நடுவானில் பயணியால் களேபரம்!

தைவான் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சீன மக்கள் விடுதலை கடற்படையின் 3 போர்க் கப்பல்கள், 13 போர் விமானங்கள் காலை முதலே தைவான் கடற்எல்லைப் பரப்பில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீன ராணுவத்தின் சுகாய் 30, Y-8 RECCE மற்றும் இரண்டு J-16 ரக நவீன போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுவதாக கூறப்பட்டு உள்ளது.

தைவான் அதிபரின் அமெரிக்க பயணத்திற்கு மறுநாள் இந்த போர் பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டு உள்ளது அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தைவானைச் சுற்றி கூட்டு போர் பயிற்சி, ரோந்து, மற்றும் தாக்குதல் பயிற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டு உள்ளது. அமெரிக்கா மற்றும் தைவானால் அதிகரிக்கும் ஆத்திரமூட்டலுக்கு சீன ராணுவத்தின் பதிலடி இது. தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே போர் பயிற்சியை திங்கட்கிழமை வரை நீட்டிக்க சீனா திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தைவான் எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அந்நாட்டு மக்கள் பீதியுடன் பார்த்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

இதையும் படிங்க : உக்ரைன் போர் எதிரொலி : ஐநாவின் மூன்று அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷ்யா தோல்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.