ETV Bharat / international

சீனாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் - கதறும் ஜி ஜின்பிங்!

சீனா பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்தித்து உள்ளதாகவும் அசாதாரண சூழலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்குமாறும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.

XI
XI
author img

By

Published : May 31, 2023, 10:41 PM IST

பீஜிங் : சீனா சிக்கலான மற்றும் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ளதாக அந்நாடின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் மோசமான அசாத்தியமான சூழல்களை எதிர்கொள்ள மக்கள் தயராக இருக்குமாறு ஜி ஜின்பிங் எச்சரித்து உள்ளார்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளார் இந்நிலையில், அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சிக்கலான மற்றும் அசாத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்சினைகளை சீனா எதிர்கொண்டு வருவதாக தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சீன ஊடகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு முன்னணி, நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் தன்னம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் வெற்றி பெறுவதற்கு போதுமான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் மோசமான மற்றும் தீவிரமான சூழ்நிலைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், அதிக காற்று, நீர் மாசுபாடு மற்றும் ஆபத்தான புயல்கள் போன்ற பெரும் பேரிடர் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியதாக கூறப்பட்டு உள்ளது.

சீனாவில் தேசிய பாதுகாப்பு அமைப்பு மற்றும் திறனை நவீனமயமாக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உண்மையான போருக்கு தயாராக இருக்க வேண்டும் மற்றும் நடைமுறை சிக்கல்களை கையாள்வதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் அவர் வலியுறுத்தியதாக கூறப்பட்டு உள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கான இடர் கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குவதை விரைவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய விரிவான பொதுக் கல்வியை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மார்ச் மாதம் சீனாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் அடக்குமுறைக்கு அமெரிக்கா தலைமை தாங்குவதாக ஜி ஜின்பிங் குற்றம் சாட்டி இருந்தார். கடந்த சில நாட்களாக, தைவான் மற்றும் தென் சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்காவிற்கு எதிராக சீனா பெரிய அளவில் துருப்புகளை நிறுத்தியும், மோதலிலும் ஈடுபட்டுள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஜி ஜின்பிங் கவலை தெரிவித்து உள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக சீன தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதனால் சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை பிரிவு தலைவர் ஜோசப் பொரெல், உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற சீனா அழுத்தம் கொடுக்காவிட்டால், சீனா - ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, ரஷ்ய அதிபர் புதினுக்கும் நல்லுறவு நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் சீனாவின் பொருளாதரம் பாதிக்கப்படும் சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் அகமது நகர் பெயர் மாற்றம்.. முதலமைச்சர் ஷிண்டே உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.