கலிபோர்னியா: கடந்த 2 ஆண்டுகளாக புதிய iMac சீரிசஸை வெளியிடாத ஆப்பிள் நிறுவனம் நேற்று (அக். 31) வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ஸ்கேரி ஃபாஸ்ட்' நிகழ்வின் போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், வெளியிட்டார்.
முன்னதாக தனது x வலைத்தளத்தில் இது குறித்து பதிவில் "புதிய மேக்புக் ப்ரோ வரிசையில் iMac ஐ அறிமுகப்படுத்துகிறோம். மேப்படுத்தபட்ட சிப்களை உருவாக்க தனிநபர் கணினி M3, M3 Pro மற்றும் M3 Max-க்கு ஹலோ சொல்லுங்கள் எனப் பதிவிட்டு இருந்தார்.
சிறப்பம்சங்கள்: கலிபோர்னியாவில் நடைபெற்ற ஸ்கேரி ஃபாஸ்ட்' நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவணம் புதிய iMac, லேப்டாப் மற்றும் மூன்றாம் தலைமுறை மேக் பிராசஸர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட m3 வகை சிப்கள் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் சிறப்பக செயல்படும் என ஆப்பிள் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Introducing the new MacBook Pro lineup and iMac with the most advanced chips ever built for a personal computer. Say hello to M3, M3 Pro, and M3 Max—the latest breakthroughs in Apple silicon! #AppleEvent pic.twitter.com/NavwrjJK02
— Tim Cook (@tim_cook) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Introducing the new MacBook Pro lineup and iMac with the most advanced chips ever built for a personal computer. Say hello to M3, M3 Pro, and M3 Max—the latest breakthroughs in Apple silicon! #AppleEvent pic.twitter.com/NavwrjJK02
— Tim Cook (@tim_cook) October 31, 2023Introducing the new MacBook Pro lineup and iMac with the most advanced chips ever built for a personal computer. Say hello to M3, M3 Pro, and M3 Max—the latest breakthroughs in Apple silicon! #AppleEvent pic.twitter.com/NavwrjJK02
— Tim Cook (@tim_cook) October 31, 2023
இந்த M3 சிப்பின் பேசிக் மாடலில் எட்டு கோர்கள் கொண்ட பிராசஸிங் எஞ்சின் மற்றும் 10 கோர்கள் கொண்ட கிராபிக்ஸ்சை கொண்டுள்ளது. இதன் மாற்றொரு மாடலான M3 Pro பிராசஸிங் எஞ்சின் 12 கோர்களையும். கிராபிக்ஸுக்கு 18 கோர்கள் உள்ளன. M3 மேக்ஸை பொறுத்த வரையில் 16 கோர் பிராசஸிங் எஞ்சினும் 40 கோர் கிராபிக்ஸும் உள்ளன. இது கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான M1 சிப்பை விட 4 மடங்கு வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
புதியதாக வெளியிடப்பட்ட M3 பிராசஸர்கள் மூலம் மேக்புக் ப்ரோ மாடல்களில் மூலம் லேப்டாப்பில் உள்ள பேட்டரி 22 மணிநேரம் தாக்கப்பிடிக்கும் உத்தரவாதம் கொண்டது. இத்துடன் ஆப்பிள் 24 இன்ச் ஆல் இன் ஒன் ஐமேக் மாடலையும் M3 சிப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த iMac பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் மற்றும் சில்வர் போன்ற 7 வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டில் இன்டெல் செமி கண்டக்டர்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த செமி கண்டக்டர்களை பயன்படுத்தத் தொடங்கியது.
மேலும் ஆப்பிள் சிலிக்கான் என்ற பெயரில் செமி கண்டர்க்டர் உற்பத்தியையும் ஆரம்பித்தது. அதிலிருந்து ஆப்பிள் மேக் லேப்டாப்களின் விற்பனை கனிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் சமீபத்திய காலாண்டுகளில் போட்டி தீவிரமடைந்துள்ளதால், ஆப்பிள் மேக் லாப் M3 சிப் வெளியீடு இந்தப் பின்னடைவில் இருந்து மீண்டுவர உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் சாம்சங் 'கேலக்ஸி டேப் A9' டேப்லெட் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன?