தாய்லாந்து நாட்டில் கடந்த நவம்பர் 25 முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
மழையால் 11 தெற்கு மாகாணங்களில் உள்ள 101 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 4,130 கிராமங்களில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 194 வீடுகள் வெள்ளத்தால் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
சூரத் தானி, பட்டாலுங், சாங்ஹ்லா, சம்பன், கிராபி, டிராங், சாத்துன், யலா, பட்டானி, நாராதிவத், நாகோன் சி தம்மரத் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் மீட்டுவருகின்றனர். இதில் மீட்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.