இலங்கை: நேற்று (நவ.18) ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள், இலங்கை பருத்தித் துறை கடல் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பாம்பனைச் சேர்ந்த 22 மீனவர்களும், அவர்களிடம் இருந்த இரண்டு நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படையினற் சிறை பிடித்துச் சென்றனர்.
இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிக்காக நேற்று இரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரத்துக்கு வந்தார். இந்நிலையில், அவரைச் சந்தித்த மீனவர் அமைப்பினர், 22 மீனவர்களையும் விடுவிக்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதனையடுத்து, மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனே இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் நல்லிணக்க அடிப்படையில், சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் படகுகளுடன் நேற்று இரவு 11.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டு, சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: எதற்காக நடிகர் ரஜினியின் பேரனுக்கு அபராதம்! முழுத் தகவல்!