பெய்ஜிங்: 14ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை சீனா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில் ஜூன் 23ஆம் தேதி காணொலி காட்சி மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில் கலந்துகொள்ளும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, ஒருமித்த கருத்து என்ற கருப்பொருளைக் கொண்டு மாநாடு நடத்தப்படுகிறது. அதோடு ஐந்து நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அலுவலர்கள், உலகளாவிய வர்த்தகத்தை வலுப்படுத்துதல், தேசிய பாதுகாப்பு, சவால்கள் உள்ளிட்டவை குறித்து அறிக்கைகளை சமர்ப்பிப்பர். கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு நடந்தது. இதற்குமுன்பாக 2016ஆம் ஆண்டு கோவாவில் நடந்த உச்சி மாநாட்டிற்கும் தலைமை தாங்கினார்.
இதையும் படிங்க: சீனாவின் 3ஆவது விமானம் தாங்கி கப்பல் அறிமுகம்