சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானை சர்வாதிகாரி என, விமர்சித்து அமெரிக்காவின் புகழ் வாய்ந்த 'தி வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார்.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து அவர் கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜக்கிய நாடுகள் சபை இதுகுறித்து விசாரணை நடத்த தன்னாட்சி விசாரணை அமைப்பு ஒன்றை உருவாக்கி விசாரணை செய்தது. அதில் ஜமால் கஷோகியைக் கொன்றது சவுதி அரேபிய அரசுதான் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் இஸ்தான்புல் நகரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், "ஜமால் கஷோகியைக் கொன்றவர்கள் அவரின் உயிருக்கு விலை கொடுத்தாக வேண்டும்" என்றார்.