ETV Bharat / international

'குர்து மக்களுக்குத் துணை நிற்போம்' - அமெரிக்க துணை அதிபர் உறுதி - அமெரிக்கா ராணுவம் சிரியா குர்து இனம்

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு பூர்வ குடி மக்களான குர்து இன மக்களின் பாதுகாப்பை அமெரிக்க ராணுவம் உறுதி செய்யும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உறுதியளித்துள்ளார்.

Mike
author img

By

Published : Nov 24, 2019, 9:41 AM IST

அமெரிக்க துணை அதிபர் மைக் பெனன்ஸ் நேற்று ஈராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். தன் மனைவி காரேன் பென்ஸுடன் பயணம் செய்த அவர், அங்குள்ள அமெரிக்க நாட்டு ராணுவ வீரர்களைச் சந்தித்தார்.

அமெரிக்க துணை அதிபரின் இந்த திடீர் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஈராக்கின் அண்டை நாடான சிரியாவை மையமாகக் கொண்டு, சில அதிரடி நடவடிக்கைகளை அமெரிக்கா அண்மையில் மேற்கொண்டது. நீண்ட நாட்களாக அங்கிருந்த அமெரிக்கப் படையினரை தன்நாட்டுக்குத் திரும்ப வருமாறு, உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல் பக்தாதியை அதிரடி தாக்குதல் நடத்தித் தீர்த்துக்கட்டினார்.

இதையும் பாருங்க: சிரிய உள்நாட்டுப் பிரச்னையின் பின்னணி

அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்ஸின் இந்த சந்திப்பு சிரியாவின் பூர்வகுடி மக்களான குர்து இன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அமைந்ததாகக் கருதப்படுகிறது. ஐ.எஸ் அமைப்பு, துருக்கி படைகளின் தாக்குதலிலிருந்து குர்து மக்களைக் காப்பதற்கு அமெரிக்க பக்க பலமாக இருக்கும் எனத் துணை அதிபர், இப்பயணத்தின் போது உறுதியளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல்
தற்கொலைப்படை தாக்குதல்

இந்நிலையில், துருக்கி கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்றது. இந்த கோரத் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு குர்து கிளர்ச்சிப் படையே காரணம் எனத் துருக்கி ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: ஜி.எஸ்.டி திட்டத்தை விளாசித் தள்ளிய நிதிக்குழு தலைவர்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.