இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த போரில், சுமார் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்தனர்.
இந்தப் போருக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அத்துடன் போரை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கோரிக்கை வைத்தார்.
அதன்படி, மே 21ஆம் தேதி போர் முடிவுக்கு வந்தது. அதற்காக, இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதற்கு பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து, போர் முடிவுக்கு ஒப்பந்தம் செய்து கொண்ட எகிப்து நாட்டின் முடிவை, ஐ.நா. சபையும் வரவேற்றுள்ளது.
மேலும், பாலஸ்தீனிய குடிமக்களுக்கு, குறிப்பாக காசாவில் வசிப்பவர்களுக்கு உடனடி உதவி தேவை என்றும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதி செய்ய எகிப்து, தன் நாட்டுப் பிரதிநிதிகளை இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நள்ளிரவில் 45 ராக்கெட்களை ஏவிய ஹமாஸ்: இஸ்ரேலின் பதிலடியால் 20 பேர் உயிரிழப்பு!