கத்தோலிக்க கிறிஸ்தவ மத குருவான போப் பிரான்சிஸ் ஈராக் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்லாமிய நாடான ஈராக்கிற்கு பயணம் செய்த முதல் போப் ஆண்டவர் இவர்தான் என்பதால் இப்பயணம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை ஈராக் சென்றடைந்த போப் பிரான்ஸிஸ் அந்நாட்டின் ஷியா பிரிவு மத குருவான அயோதுல்லா அலி அல்-சிஸ்தானியை சந்தித்துப் பேசினார். அமெரிக்க- ஈராக் போர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஏற்பட்ட உள்நாட்டு போர் என பல போர் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள ஈராக் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போப் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்நாட்டின் மொசூல் நகரில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பாதிக்கப்பட்டோரின் உறவினர்களிடம் உரையாடினார். அதன்பின்னர், குர்திஸ்தான் இன மக்களின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிய போட்டுக்கோ.... ஜாலியான சான் டியாகோ குரங்குகள்