மியான்மரில், ராணுவ ஆட்சி பிப்ரவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோரை ராணுவம் சிறையில் வைத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது.
இதுவரை 600க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐ.நா. சபை, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஏப்ரல் 9ஆம் தேதி, பாகோ பகுதியில் ராணுவத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல் துறையினரும், ராணுவமும் சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. குண்டுகள் வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ’தடுப்பூசி விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு’ - டெட்ரோஸ் அதானோம் குற்றச்சாட்டு