மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் கிர்குக் நகரில் அமைந்துள்ள அந்நாட்டு ராணுவத்தளம் மீது சமீபத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவோடு செயல்பட்டுவரும் கத்தெய்பு ஹெஸ்பொல்லா (Kataib Hezbollah) என்ற ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கமே காரணமென குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.
இதில், ஐந்து கத்தெய்வு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாகச் சென்று அதனைச் சூறையாடினர்.
ஈராக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு அந்நாட்டு அரசு, இயக்கதினர் மூத்தத் தலைவர்கள் அறிவுறுத்தியதின்பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு 750 அமெரிக்கப் படையினர் களமிறக்கப்படவுள்ளனர். ஈராக்கில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுவதால், ஐரோப்பிய, மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ அதனை ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க : பினராயி விஜயனுக்கு எதிராக மாநிலங்களவையில் தீர்மானம்